Ticker

6/recent/ticker-posts

இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்க அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அஷ்ரஃப் கோரிக்கை

கொரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கியுள்ள நிலையில்,  முஸ்லிம் கலாச்சார  திணைக்களத்தின் பணிப்பாளர்  அஷ்ஷெய்க்  ஏ.பி.எம்.அஷ்ரஃப்  அனைத்து இஸ்லாமிய  கல்வி நிறுவனங்களையும் மூடி மாணவர்களுக்கு  விடுமுறை வழங்குமாறு இஸ்லாமிய கல்வி  நிறுவனங்களிடம் கோரிக்கை  விடுத்துள்ளார்.

மக்தப்கள், குர்ஆன் மத்ரஸாக்கள், ஹிஃப்ல் மத்ரஸாக்கள், அஹதியா பாடசாலைகள் மற்றும் அரபு கல்லூரிகள் உள்ளிட்ட  அனைத்து நிறுவனங்களையும்  மறு அறிவித்தல்  வரும் வரை மூட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாணவா்கள் தங்கி கற்கும்  அரபு கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ல் மத்ரஸாக்கள் தொடர்பாக  குறித்த பிரதேச மருத்துவ அதிகாரிகளுடன்  MOH கலந்தாலோசித்து முடிவு செய்யும் படியும் முஸ்லிம் கலாச்சார  திணைக்களத்தின் பணிப்பாளர்  அஷ்ஷெய்க்  ஏ.பி.எம்.அஷ்ரஃப்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Post a Comment

0 Comments