Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான பலர் நாட்டின் சில பகுதகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வதந்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளியைத் தவிர, வேறு எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று வைரஸ் ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments