Ticker

6/recent/ticker-posts

ரோஸியை பதவியிலிருந்து நீக்க முயற்சி?


கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்கவை மேயர் பதவியிலி
ருந்து நீக்குமாறு கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அறிய வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரோசி சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருக்கின்ற போதிலும், அவரது மகன் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்டார். ரோசி சேனாநாயக்க அவரது மகனுக்கு ஆதரவு வழங்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மேயர் பதவியில் இருந்து தன்னை தனி ஒருவரின் விருப்பப்படி நீக்க முடியாது என ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தன்னை அவ்வளவு எளிதில் பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும், தான் மக்களால் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரோசி சேனாநாயக்க கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments