Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் நிலைய வரிசை தகராறு கத்தி குத்தில் முடிந்தது! 4 பேர் மருத்துவமனையில்..!


வெல்லவாயவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (24) இரவு கத்தி குத்து  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கத்தி குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments