சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சி செய்த 54 பேர் கல்முனையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவா்கள் பயணிப்பதற்கு தயாராக இருந்த மீன்பிடிக் கப்பலும் இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
சட்டவிரோதமாக பயணம் செய்யவிருந்த இந்தக் குழுவினா் இலங்கையின் எந்த பிரதேசத்தை சோ்ந்தவா்கள் என்ற தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குக்கு செல்ல முயன்ற 399 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 91 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான குடியேற்றம் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 200,000 ரூபா வரை அபராதமும் ஐந்து வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

0 Comments