மருத்துவமனைகளில் திட்டமிட்ட சத்திரசிகிச்சைகள் முடங்கும் அபாயம் இருப்பதாகவும், இன்று அல்லது நாளை இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
திட்டமிடப்பட்ட நடமாடும் இரத்த தான முகாம்கள் இரத்துச் செய்யப்பட்டமையினால் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையான இரத்தம் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் டொக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றும் இன்றும் நாடளாவிய ரீதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பல நடமாடும் இரத்ததான முகாம்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு தமது இந்த செயற்திட்டத்தை பெரிதும் பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எாிபொருள் தட்டுப்பாடு காரணமாக ரத்த தான முகாம்களுக்கு மருத்துவ ஊழியர்களை ஏற்றிச் செல்ல முடியாத நிலை மற்றும் போக்குவரத்து வசதிகளின்றி இரத்த தான நன்கொடையாளர்கள் வராததால் முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரத்த தான முகாம்களுக்கு தேவையான அத்தியாவசிய இரசாயன மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லாததும் இரத்த தான முகாம்களின் செயற்பாடுகளை மிகவும் பாதித்துள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கான சிசேரியன் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் அனைத்தும் இரத்தம் இல்லாததால் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.

0 Comments