மருந்தகங்களில் (பாமசிகளில்) ஒரு வாரத்திற்கு மட்டுமே மருந்து வகைகள் கையிருப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து வகைகளை விநியோகிக்கும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் (பாமசிகள்) மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
“மருந்துக் கடைகளுக்கு மருந்துகளை எடுத்துச் செல்வதற்கான எரிபொருள் கூட எங்களிடம் இல்லை. மருந்துக் கடைகளில் இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே மருந்துகள் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் மருந்தகங்கள் தானாகவே மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இரண்டு கதைகள் இல்லை. ஏனெனில் மருந்தகங்களில் மருந்துகள் இல்லை, இதுதான் உண்மையான கதை" என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்தார்.

0 Comments