எம்பிலிப்பிட்டிய, 99வது கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் ஏற்பட்ட குழப்பத்தை கட்டுப்படுத்த தலையிட்ட இராணுவ வீரா் ஒருவர் நேற்று (03) மாலை கத்தி குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
05 நாட்களுக்குப் பின்னர் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்ததாகவும், சில மணித்தியாலங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாகவ அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பில் இருந்த இராணுவத்தினர் நிலைமையைக் கட்டுப்படுத்த தலையிட்டபோது, கலவரக்காரர் ஒருவர் இராணுவ வீரரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபா் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரின் துப்பாக்கியை பறித்துச் சென்றுள்ளதாகவும் அம்பிலிபிட்டிய பொலிஸார் தொிவித்துள்ளனா்..

0 Comments