Ticker

6/recent/ticker-posts

ரணிலின் உத்தரவை நிராகரித்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்!


சமூக வலைத்தளங்களை குறுகிய காலத்திற்கு முடக்க தவறியதன் காரணமாகவே 9ம் திகதி ஜனாதிபதி மாளிகை மற்றும் 13ம் திகதி பிரதமர் அலுவலகம் போன்றவற்றை  போராட்டக்காரா்கள் கைப்பற்றுவதற்கு இலகுவானதாக அமைந்ததாக பாதுகாப்பு தரப்பினா்  சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவும், பிரதமா் ரணிலும் மேற்படி கட்டளையை பிறப்பித்திருந்த போதும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதனை நிராகரித்துள்ளது.

முகநூல் நேரடி ஒளிபரப்புகள் மற்றும்  சமூக ஊடகங்கள் ஊடாக மக்களை போராட்டத்திற்கு அழைப்பதை தடுக்கும் நோக்கிலேயே  இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மக்களின் ஜனநாயக உரிமைக்கு இடையூறு விளைவிக்க முடியாத நிலையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கோட்டாவினதும், ரணிலினதும் அறிவுறுத்தல்களை புறக்கணித்துள்ளது.

கடந்த ஜூலை 13 அன்று, தற்காலிக ஜனாதிபதியாக செயல்படும் ரணில், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தலைவரை இராணுவத் தலைமையகத்திற்கு  வாகனம் ஒன்றை அனுப்பி அவசரமாக அழைத்திருந்தாா். 

பாதுகாப்புதரப்பினரின் வேண்டுகோளின் பேரில் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து சமூக வலைதளங்களை உடனடியாக முடக்குமாறு உத்தரவிட்டாா். 

என்றாலும்  ரணிலின் அறிவுறுத்தல்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  புறக்கணித்துள்ளதாக அந்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது. 

கடந்த 13ம் திகதி போராட்டக்காரா்கள் மிகக்குறுகிய நேரத்திற்குள்  பிரதமாின் அலுவலகத்தை  கைப்பற்றினா் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments