Ticker

6/recent/ticker-posts

பிரதமர் பதவிக்கு நாலு முனைப் போட்டி! சரத் பொன்சேகாவும் பட்டியலில்..?


ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து, அதுவரை பிரதமர் பதவியை வகித்த ரணில் தானாகவே அந்த பதவியை இழந்ததால் அரசியலமைப்பின் பிரகாரம் விரைவில் பிரதமரை நியமித்து அவருக்கு கீழ் அமைச்சரவையை அமைக்க வேண்டும்.

புதிய ஜனாதிபதி ரணில் நேற்று இரவு கங்காராமவில் இடம்பெற்ற சமய வழிபாடுகளில் கலந்து கொண்ட போது, ​​அடுத்த பிரதமர் யார் என ஊடகவியலாளர்கள் வினவினா். அதற்கு ரணில் ​​அரசியலமைப்பின் பிரகாரம், பெரும்பான்மையை நிரூபிப்பவரையே பிரதமராக நியமிப்பதாக தெரிவித்தார். 

பாராளுமன்றத்தின்  தனது  கட்சி  சாா்பாக  தான் மட்டும் இருப்பதால், தனக்கு பிரதமராக தொிவு செய்வதற்கு யாரும் இல்லை என, நகைச்சுவையாக கூறினார்.

பிரதமா் பதவிக்காக  சரத்பொன்சேகா, தினேஷ் குணவா்தண, சுசில் பிரேமஜயந்த, விஜயதாஸ ராஜபக்ஷ போன்ற நால்வாின் பெயா்கள் சிபாா்சு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.

மக்கள் ஆணை அறவே இல்லாமல் பாராளுமன்ற உறுப்பினா்கள் 134 பேரால் ஜனாதிபதியாக தொிவு செய்யபட்டுள்ள  ரணில் விக்கிரமசிங்க,  இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். இதன் பிறகே பிரதமர் பதவி  அறிவிக்கப்படும் என்று அறிய வருகிறது.

Post a Comment

0 Comments