Ticker

6/recent/ticker-posts

ரணிலுக்கு வாக்களித்த சஜித் தரப்பினா்! யாா் அந்த 14 போ்?


நேற்று (20) பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற  ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் போது , ​​சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி  கட்சியின் சிலா் ரணிலுக்கு வாக்களித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களில் 6 சிங்களவர்களும் 8 முல்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்களும் அதாவது மொத்தம் 14 பேர் ரணிலுக்கு வாக்களித்தாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அவா்கள் யாரென்று ஹாின் வெளிப்படுத்தவில்லை.

டலஸ் அழகப்பெருமவிற்கு  எதிர்பார்த்த வாக்குகள்  குறைந்தது குறித்து  பெரும் சந்தேகங்கள் வெளியாகியிருந்தது.

சஜித் அணியில் சிலா்  வாக்களிப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

டலஸுக்கு ஆதரவளிப்பதாக கட்சிகளின் தலைவா்கள் அறிவித்திருந்த போதும், ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உள்ளவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இவ்வாறு செயற்பட்டுள்ளனர் என  ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார பாராளுமன்றத்தில்  தெரிவித்திருந்தார். 

Post a Comment

0 Comments