அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரத்தன தேரருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.
2021ஆம் ஆண்டு சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டம் நடாத்தியதாகவும் , பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி பொலிஸார் இவா்களுக்கு எதிராக கோட்டை நீதிமன்றில் புகார் அளித்திருந்தனா். ஆனால் வசந்த முதலிகேயும், ரத்கரவ்வே ஜினரத்தன தேரரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

0 Comments