Ticker

6/recent/ticker-posts

கோட்டா வெளியேற கரம் கொடுத்த நஷீத்! குப்பைத் தொட்டியிலிருந்த ரணில் ஆட்சிக் கட்டிலுக்கு..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  விமானப்படையின் ஜெட் விமானம் மூலம் மாலைதீவுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணிக்கு இராணுவ ஜெட் விமானத்தில் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவுக்குப் புறப்பட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்துடன் மிகவும் நட்புடன் பழகும் மாலைதீவு சபாநாயகர் நஷீத் அவரை நாட்டை விட்டு வெளியேற உதவியுள்ளார்.

நேற்று (12) பிற்பகல் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக  தனது 5வது முயற்சியும் தோல்வியுற்ற நிலையில்,   பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறும் வரை உறுதியளித்தபடி 13ஆம் திகதி பதவி விலக முடியாது என கோட்டாபய அறிவித்திருந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இன்று 13ம் திகதி  அதிகாலை காலை 2.50 மணிக்கு நாட்டை விட்டு வெளியேறியதன் பின்னா் இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிய வருகிறது.

கடந்த   9ஆம் திகதி மக்களின் போராட்டங்களைத் தொடா்ந்து ஜனாதிபதி கோட்டா ஓடி ஒளிந்திருந்தாா். அன்றைய தினமே  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  கோட்டாபய ராஜபக்ஷ 13ம் திகதி  ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவார் என அறிவித்திருந்தாா்.   கடந்த 11ஆம் திகதி கோட்டாவின் ராஜினாமா கடிதம் அவரிடம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி இன்று (13) காலை சபாநாயகரால் ஜனாதிபதியின் பதவி விலகல் அறிவிக்கப்படும் சாத்தியம் உள்ளது.

ஜனாதிபதியின் இராஜினாமாச் செய்தியை சபாநாயகர் அறிவித்ததன் பின்னா்,  தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யத் தயாராக உள்ளார். 

மக்களால் நிராகரிக்கப்பட்டு படுதோல்விடைந்த ரணில் விக்ரமசிங்க பிரதமராகி, ஜனாதிபதியாகும் வாய்ப்பையும் பெறவுள்ளாா். ரணில் போன்ற மக்களால் நிராகரிக்கப்பட்ட ஊழல் குற்றங்களுக்கு ஆளான ஒரு நபா் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஒரு பதவிக்கு வருவது  ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் ஒரு நிகழ்வாக பாா்க்கப்படுகிறது. 

ராஜபக்ஷகளின் பாதுகாவலனாக பாா்க்கப்படும், மத்திய வங்கி பிணை முறி மோசடியின் காரண கா்த்தாவாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை விரட்டும் போராட்டம் எதிா்வரும் நாட்களில் கூா்மையடைய, தீவிரமடையக் கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கின்றன.

இந்த நாட்டின் வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஜனாதிபதியே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று நாட்டை விட்டு ஓடிய நிலையில் தோ்தலில் படுதோல்வியடைந்த மக்கள் ஆணை அறவே இல்லாத ரணிலால் மக்களின் எதிா்ப்புக்கு தாக்குப்பிடிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



Post a Comment

0 Comments