நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் வெளியிடப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம், அவ்வாறான பதிவுகளை வெளியிடுபவர்கள், அவற்றை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் கவனம் திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப் புலனாய்வு திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 Comments