Ticker

6/recent/ticker-posts

குறுகிய காலத்தில், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் !


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கூற்றுப்படி, பாகிஸ்தானுடன் 6 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதிக்காக உத்தியோகபூர்வ அளவிலான கலந்துரையாடலின் போது ஒரு உடன்பாட்டை எட்ட முடிந்ததுள்ளது.

அதன்படி, இந்த கடன் வசதியின் கீழ் வழங்கப்படும் முதல் கடன் தவணையாக 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் தொகை விரைவில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை போலவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த பாகிஸ்தானும் இந்தக் கடன் தொகையை மிக விரைவாகப் பெற்றுள்ளது.

இது தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், தனது இணையத்தளத்தில் சர்வதேச நாணய நிதியம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கடன் வசதிக்கான ஐஎம்எஃப் நிபந்தனைகளை பாகிஸ்தான் ஏற்கனவே பூர்த்தி செய்துள்ளதால், எந்த பிரச்சனையும் ஏற்படாது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு தனது வரி வருவாயை ஏற்கனவே அதிகரித்துள்ளதோடு எரிசக்தி விலையையும் உயர்த்தியுள்ளது. பாகிஸ்தானும் பொதுச் செலவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு  வழங்கப்படவிருக்கும்  நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடா்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஏழாவது மற்றும் எட்டாவது உத்தியோகபூர்வ அளவிலான கூட்டுப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடித்ததாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனா்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் கிளையின் ஒப்புதலுக்குப் பிறகு, முதற்கட்டமாக பாகிஸ்தானுக்கு 1,177 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும்.

இதன்படி, இந்த கடன் வசதி மூலம் இதுவரை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட நிதியின் பெறுமதி 4.2 பில்லியன் டொலர்களாக மாறும் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான கடன் வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மதிப்பை 7 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையைப் போலவே சீனாவிடமிருந்து அதிகளவாக கடனைப் பெற்ற  பாகிஸ்தான்,  நாட்டுக்கு பிரயோசனமற்ற பல திட்டங்களில் முதலீடு செய்து அரசியல், பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

Post a Comment

0 Comments