Ticker

6/recent/ticker-posts

கறவை மாடு இறக்குமதியில் 174 கோடியை “கறந்தவா்” யாா்..?


கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்காக அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு விவசாய அமைச்சு 174 கோடி ரூபாவை செலுத்தியுள்ள போதிலும், கறவை மாடுகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்காக அமைச்சு 2018 ஆம் ஆண்டு ஏழு கோடி முப்பத்து ஒன்பது லட்சத்து  ஐம்பத்து  நான்காயிரம் (7,39,54000) அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுள்ளதாகவும் அதற்கேற்ப அமைச்சு இரண்டு அவுஸ்திரேலிய வங்கிகளுடனும் ஒரு அவுஸ்திரேலிய நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் 20,000 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட இருந்ததாகவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஐந்தாயிரம் கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், உடன்படிக்கைகளின் படி, அந்த விலங்குகளின் வளா்ப்புத் திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில் மீதமுள்ள 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

முதல் 5,000 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இந்த திட்டம் தோல்வியடைந்த நிலையில், மீதமுள்ள 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 174 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 5000 கறவை மாடுகளைத் தவிர, இலங்கைக்கு கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும், இது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், மேலும்  15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்ததற்காக 174 கோடி ரூபாயை அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையதளமொன்று செய்திவெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments