Ticker

6/recent/ticker-posts

நாட்டின் சில பகுதிகளில் இடி மின்னல் அபாயம்!


இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன்  பலத்த இடி மின்னலுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில்  பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  மழை பெய்யக் கூடும் எனவும், நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை ஓரளவு குறைய வாய்ப்பிருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments