சீனப் பொலிசார் தனது ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கி கைது செய்ததாக பிபிசி நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.
ஷாங்காயில் நடந்த ஒரு ஆா்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற அவா், பல மணிநேரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளாா்.
"ஷாங்காயில் நடந்த போராட்டங்களின் போது செய்தி சேகரிக்கச் சென்ற லோரன்ஸ் என்ற தனது ஊடகவியலாளா் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு நடத்தப்பட்ட விதம் குறித்து பிபிசி மிகவும் கவலை கொண்டுள்ளது" என்று பிரிட்டிஷ் பொது சேவை ஒளிபரப்பாளரின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது, அவர் காவல்துறையினரால் அடித்து உதைக்கப்பட்டார். இது அவர் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளராக பணிபுரியும் போது நடந்தது" என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
அண்மையில் சீனாவில் கொரோனா பரவலின் வேகம் அதிகாித்து வருகிறது. கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் இந்நகரங்களில் அமுலில் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடாத்தி வருகின்றனா். அவ்வாறு மக்கள் எதிர்ப்புகளைக் கண்ட பல சீன நகரங்களில் ஷாங்காயும் ஒன்றாகும்.
இந்த போராட்டத்தின் போது, செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பிபிசியின் ஊடகவியலாளா் லோரன்ஸ், பொலிஸ் சீருடையில் இருந்தவர்களால் கைது செய்யப்படுவதை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் காட்டுகின்றன.
லோரன்ஸை தடுப்புக் காவலுக்கு வைத்தமைக்கான நம்பகமான விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை என்று பிபிசி தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் கூட்டத்தில் இருந்து செய்தி சேகரித்ததால், அவரும் கொவிட் நோயால் பீடிக்கப்படுவாா் என்ற காரணத்தால், அவரது நலனுக்காகவே அவரை கைது செய்ததாக சீன அதிகாரிகள் தொிவித்துள்ளனா்.
சீன அதிகாரிகளின் பொறுப்பற்ற இந்தக் கூற்று பலரின் விமா்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

0 Comments