Ticker

6/recent/ticker-posts

சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயன்ற வயோதிபர் கைது!

 


(பாறுக் ஷிஹான்)


வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி  அழைத்து சென்று  அங்க சேட்டை செய்த முதியவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை(25) மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதன் போது தனது வீட்டின் வளவில் விளையாடிக்கொண்டிருந்த சுமார் 8 வயதினை உடைய சிறுமியை அவ்வழியால் மாடு மேய்த்து கொண்டிருந்த 64 வயது மதிக்கதக்க முதியவர் தேங்காய் பறித்து தருவதாக அழைத்து சென்று அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக சிறுமியின் உறவினரால்  முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய சந்தேக நபரான   முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  இன்று நீதிமன்ற நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக சிறுவர் பெண்கள் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Post a Comment

0 Comments