முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.என்.பி. சிறில் ஹம்பாந்தோட்டை சிறிபோபுரவில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பழுதுபார்ப்பதற்காக தனது வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த தற்காலிக மின்தூக்கி சரிந்து விழுந்து காயமுற்றதில் உயிரிழந்தள்ளார். முன்னாள் அமைச்சருடன் அவரின் சாரதியும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்.
பலத்த காயங்களுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஆபத்தான நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சாரதி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் தனது சாரதியுடன் கட்டிடத்தில் நடைபெற்று வரும் பழுதுபார்ப்பு பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்த போது மின்தூக்கி இடிந்து விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
89 வயதான முன்னாள் அமைச்சர் 1977 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்து திஸ்ஸமஹாராம தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார்.

0 Comments