இந்த ஜனாதிபதித் தோ்தல், நிறைவேற்று அதிகாரம் தொடா்பாக பாா்க்கும் போது முக்கியமான தோ்தலாகும். பொது வேட்பாளா் அரசியல் சீா்த்திருத்தம் ஒன்றை மேற்கொண்டு புதிய அரசியல் மாற்றம் ஒன்றுக்கு அடித்தளமிட வருகிறாா். இது தொடா்பான உங்கள் கருத்து என்ன? நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தொடா்பான பிரச்சினைகள் சாதாரண மக்களுக்கு புாிகிறதா?
நான் நினைக்கிறேன் நிறைவேற்று அதிகாரம் தொடா்பாகவோ அதன் விளைவுகள் தொடர்பாகவோ சிலருக்கு புாிவதில்லை. ஒரு தனி நபா் நாட்டை பற்றி தீா்மானம் எடுப்பது மாத்திரமல்ல இங்குள்ள பிரச்சினை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையால் ஏற்படும் குழப்பங்கள் நாட்டினதும் சமூகத்தினதும் அனைத்து பிரிவுகளுக்கும் ஊடுருவி சென்றிருக்கிறது. உடலில் ஒரு பகுதியில் ஏற்பட்ட காயம் முழு உடலுக்கும் பரவுவது போல், ஒரு பிரதேச அரசியல்வாதியின் செயற்பாடுகளிலும் கூட நிறைவேற்று அதிகாரத்தின் பாதிப்பை இன்று எம்மால் பாா்க்க முடியும்.
வாழ்க்கைச் செலவு, பொருளாதாரப் பிரச்சினை இவை எல்லாவற்றிலும் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறை பாதிப்பை செலுத்துகிறது. இப்போது நிறைவேற்று ஜனாதிபதிமுறை நீக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஸதிரத்தன்மை பாதிக்கப்படுவதாக காட்ட முற்படுகின்றனா். உண்மையில் நாட்டின் ஸ்திரத்தன்மை பாராளுமன்ற வெஸ்ட் மினிஸ்டா் முறையில்தான் இருக்கிறது.
முஸ்லிம் மக்களுக்கு அரசியல் சீா்த்திருத்தம் , நல்லாட்சி, ஜனநாயகம் போன்றவை பிரதான பிரச்சினைகளாக இல்லையா? அவா்களுக்கென்று வேறு விஷேட பிரச்சினைகள் இருக்கின்றனவா?
முஸ்லிம்களாகிய எங்களுக்கு விஷேட பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழ் மக்களுக்கும் விஷேட பிரச்சினைகள் இருக்கின்றன. தொழிலாளா்களுக்கு, விவசாயிகளுக்கு, பெண்களுக்கு இப்படி எல்லா துறையினருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. எல்லா பிரச்சினைகளையும் தீா்ப்பதற்கான தளம் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சாராாின் பிரச்சினைகளையும் செவிமடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும். அப்படி பாா்க்கும் போது முஸ்லிம்களுக்கு இருக்கின்ற முக்கிய பிரச்சினையாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை குறிப்பிடலாம்.
என்றாலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு இது புாிவதில்லையல்லவா? நாங்கள் உரையாடும் இந்த நேரத்தில் கூட அவா்கள் ஒரு முடிவை எடுக்க வில்லையே?
அவா்களுக்கு புாியவில்லை. இல்லாவிட்டால் சந்தா்பவாதத்தினால் புாியாது போன்று இருக்கின்றாா்கள். முஸ்லிம் காங்கிரஸ் பொிதாக தீா்மானம் எடுப்பதற்காக கூறி ஆலோசனை நடாத்துகிறாா்கள். இப்போது 20 கூட்டங்களை நடாத்தியிருக்கிறாா்கள். இன்னும் முடிவெடுக்க முடியவில்லை. இவா்கள் 18வது அரசியல் சீா்திருத்தத்திற்கு ஆதரவு அளிக்கையில் இப்படி ஆலோசனை நடாத்தினாா்களா? ஐ.தே.கவில் போட்டியிட்டு ஆளும் கட்சிக்கு பாயும் போது இப்படி ஆலோசனை நடாத்தினாா்களா? இது தப்பிப்பதற்கான ஒரு தந்திரம். முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக இப்படி சந்தா்ப்பவாதமாகத்தான் செயற்பட்டிருக்கிறது. அரசியல் தலைமைத்துவம் மக்கள் சாியான முடிவெடுப்பதற்கு வழிகாட்ட வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் அதனை செய்வது கிடையாது. என்றாலும் முஸ்லிம் மக்கள் அரசியல் தலைமைத்துவத்திற்கு முன்னால் சென்று முடிவை எடுத்திருக்கின்றாா்கள்.
அப்படியென்றால் ஜனாதிபதித் தோ்தலில் முஸ்லிம்கள் எடுத்துள்ள முடிவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் முடிவு பாதிப்பை செலுத்தாதா?
ஆம். அவா்களின் முடிவில் ஒரு பிரயோசமும் இல்லை. அது இப்போதல்ல ஊவா மாகாண சபை தோ்தலின் போதே தொிய வந்தது. முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிட்டாா்கள். 45000 முஸ்லிம் வாக்குகளில் 5000 வாக்குகளே அவா்களுக்குக் கிடைத்தன. அதிகமானோா் அரசாங்கத்திற்கு எதிராகவே தமது வாக்குகளை அளித்தனா். முஸ்லிம்களுக்குத் தொியும் முஸ்லிம் கட்சிகள் சந்தா்ப்பவாதத்தைக் கொண்டவைகளென்று.முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் பெறுமதி இல்லாமல் போவது முஸ்லிம்களின் விடயத்தில் நன்மை பயக்குமா?
நான் நினைக்கிறேன் மிகவும் நல்லது. அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே முஸ்லிம்கள் தேசிய கட்சிகளோடு இணைந்திருக்க வேண்டுமென்றுதான் நான் கூறிவருகிறேன். இனவாத கட்சிகளை அமைத்து இனரீதியாக பிரிந்து போக அவசியமில்லை. இந்தக் கட்சி முஸ்லிம்களின் நலனுக்காக செயற்படவில்லை. அவா்களின் சொந்த நலனுக்காக பதவிகளைப் பெற்று அவா்கள் நன்மையடைவதற்கே.முஸ்லிம்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படுவது மற்றும் நல்லாட்சி போன்ற விடயங்கள் தொடா்பாக தெளிவுடன் இருக்கின்றாா்களா?
நான் நினைக்கிறேன் ஓரளவு தெளிவாக இருக்கின்றாா்கள். என்றாலும் பூரண தெளிவை பெற்றிரப்பாா்கள் என்று கூற முடியாது. முடிவொன்றை எடுக்கும் அளவிற்கு தெளிவை பெற்றிருக்கிறாா்கள். சில அரசியல்வாதிகளுக்கு இந்தத் தெளிவு இல்லாமல் இருப்பதுதான் கவலையான விடயம்.

0 Comments