Ticker

6/recent/ticker-posts

யாா் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கு ஆப்பு தானா?

ஞானசார தேரர் பகிரங்மாக இஸ்லாத்தையும் முஸ்லிமகளையும் எதிர்ப்பவர் மடையனைப் போல் கத்துபவர் பல பள்ளிவாசல்கள் உடைக்கப் படுவதற்கு பின்னணியிலிருந்து செயற்பட்டவர் ஹலால் சான்றிதழ் விவகாரத்தை அசிங்கமாக சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரப் படுத்தியவர்
ஆனால் இவருக்கு சிங்கள சமூகத்தில் பெரிய அளவில் அங்கீகாரமில்லை BBS காரர்கள் அரசாங்கத்தின் அடியாட்கள் என்பது சிங்கள சமூகமே எற்றுக்கொண்ட ஒரு விடயம் .
ஆனால் மைத்ரீயுடன் இணைந்துள்ள சம்பிக்க ஒரு மின்னியல்துறை பொறியியலாளர் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக அப்பட்டமான பொய்களை ஒரு சிந்தனையாக தலைவர் அஷ்ரபின் காலந்தொட்டு பரப்பி வருபவர் . 
ஜிஹாத் சம்பந்தமாக பொய்யான விளக்கங்களை இட்டுக்கட்டி புத்தகங்கள் எழுதி வெளியி்ட்டவர். ஹக்கீமின் தலைமையில் கிழக்கில் ”கிழக்கிஸ்தான்” என்று ஒரு நாட்டை முஸ்லிம் அடைப்படை வாதிகள் உருவாக்க போகிறர்கள் என்று அண்டப் புளுகுகளை ஊடகங்களில் பரப்பியவர்.
அழுத்கமை சம்பவத்தில் ஜிஹாதிகள் ஆயதங்களுடன் சிங்கள வீடுகளை தாக்கினார்கள் என்று ஊடகங்களுக்கு பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்பியவர். கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் சம்பவத்தன்போது காடையர்களுடன் கைகோர்த்தவர். இவர் சுற்றாடல் அமைச்சராக இருந்தபோது பள்ளிவாசல்களில் அதான் சொல்வதற்கு தடை ஏற்படுத்தியவர்.
 ஆனால்  ஞானசாரவைப் போலல்லாது சிங்கள மக்கள் இவரை ஒரு புத்தி ஜீவியாகவே பார்க்கின்றனர். மைத்ரியின் ஆட்சியில் இவர் ஒரு பிரபல அமைச்சாராக வர வாய்ப்புகள் இருக்கிறது. இப்படிப் பாா்க்கும் போது  யார்ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கு இந்த இனவாதிகளால் பிரச்சினை இருக்கத்தான் போகின்றது.

நன்றி முகப்புத்தகம் - மொஹம்மத் நவ்ஸர்
Mohamed Nawzar

Post a Comment

0 Comments