ஜனாதிபதி தேர்தலுக்கு இராணுவத்தைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும் என்று ஜே.வி.பி. தலைவா் அனுரகுமார திசாநாயக்க நேற்று வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது தொிவித்துள்ளாா். ஜனாதிபதி தோ்தலுக்காக ஜே.வி.பி. நடாத்தி வரும் கூட்டங்களில் வட மாகாணத்திற்கான முதலாவது கூட்டம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.
வரலாற்றில் ஒருபோதும் இல்லதவாறு மஹிந்த நாட்டை இராணுவ மயமாக்கி வருவதாகவும், அரசியல் விவகாரங்களில் இராணுவத்தை அதிகம் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.
யுத்தம் நிறைவு பெற்ற நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீா்க்கப்படாமல் இருப்பதாகவும், யுத்தத்தினால் 45,000 பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருப்பதாகவும் கூறினாா்.
தாய், தந்தையை இழந்த சிறுவா்கள் 2500 போ் துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, தனது பிள்ளைகளின் செல்லமான செயற்பாடுகள் வெளியில் வந்துவிடாமல் இருப்பதற்காக ஜனாதிபதி கடுமையான ஊடக தணிக்கையை மேற்கொண்டு வருகிறாா் என்றும் அனுர குமார கூறியுள்ளாா்.
கே.பி, கருணா அம்மான், தயா மாஸ்டா் போன்றவா்கள் உயர் கௌரவப் பதவிகளில் இருக்கும் போது அவா்களின் கட்டளைகளை ஏற்று செயற்பட்ட அங்கத்தவா்கள் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனா்.
எதிா்வரும் 8ம் திகதியின் பின்னா் பிரச்சினைகள் எல்லாம் ஒரேயடியாக தீா்ந்து விடும் என்று நினைக்கமுடியாது. அன்றைய தினம் பிரச்சினைகளுக்கான தீா்வுகளை எட்டுவதற்கான ஆரம்ப புள்ளி மட்டுமே என்றும் நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்று சோ்ந்து செயற்பட வேண்டும் என்றும் அனுர குமார கூறியுள்ளாா்.

0 Comments