Ticker

6/recent/ticker-posts

தேர்தல் தினம் பின்போடப் படும் சாத்தியம்?

கடும் மழையின் காரணமாக 18 மாவட்டங்களிலும் இலட்சக் கணக்கானோா் இடம் பெயா்ந்து இன்னல் பட்டுக்கொண்டிருக்கின்றனா். இந்நிலையில் எதிா்வரும் 8ம் திகதி ஜனாதிபதித் தோ்தலை நடாத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடா்பாக தேர்தல் ஆணையாளா் ஆராய்ந்து வருவதாக அறிய வருகிறது.

தோ்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிாிய தனிப்பட்ட முறையில் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்து,  அரச நிா்வாக அதிகாரிகளை சந்திக்கவுள்ளாா். வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடா்பாகவும் அவா் அதிகாாிகளுடன் கலந்துரையாட உள்ளாா்.

பொது அணி வேட்பாளா் மைத்திாிபால சேனாநாயக்காவின் சட்ட ஆலோசகர்கள் இயற்கையின் பாதிப்புகளை தோ்தல் ஆணையாளாின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனா்.

என்றாலும், எவ்வித காரணத்தைக் கொண்டும் தோ்தல் பின் போடப்படுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று பொஐமு செயலாளா் சுசில் பிரேம்ஜயந்த கூறியுள்ளதாக சிங்கள பத்திாிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments