Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அல்பல்தாகிக்கு ஆறு வருட சிறை

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினரான அல்பல்தாகிக்கு எகிப்திய நீதிமன்றம் ஆறு வருட சிறைத் தண்டனையை விதித்திருக்கிறது.

2011 ம் ஆண்டு இடம்பெற்ற அரபு வசந்த போராட்டங்களின் போது சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறியதாக  அவா் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சிக் காலத்தின் போது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினரை ஒடுக்குவதற்கு கடுமையான அடக்குறையை பிரயோகித்து, ஆயிரக்கணக்கானோரை சிறையிலடைத்து சித்திரவதை செய்தது இங்கு குறிப்பிடத் தக்கது.

Post a Comment

0 Comments