Ticker

6/recent/ticker-posts

எல்லோரும் சேர்ந்து செய்து விட்டு இப்போது என்னை மட்டும் திட்டுகிறாா்கள் - மஹிந்த

எங்களில் பிழைகள் ஏற்பட்டிருந்தால் அது நாம் எல்லோரும் சேர்ந்து செய்தவையே.  எல்லோரும் சேர்ந்து செய்து விட்டு என்னை மட்டும் எப்படி குற்றம் சாட்ட முடியும் என்று ஜனாதிபதி அண்மையில் தோ்தல் பிரசாரம் ஒன்றின் போது கேள்வியெழுப்பியிருக்கிறாா்.

நிறைவேற்று அதிகாரத்தை பாவித்து கபினட் அமைச்சர்களை அமைதியாக்கி அபிவிருத்தி என்ற பெயரில் பல கோடி ரூபாய்களை மஹிந்த சகோதர கம்பனி ஏப்பமிட்டு  இருப்பதாகவும், இலங்கை வரலாற்றில் ஊழல்கள் அதிகம் செய்த அரசு மஹிந்த அரசே என்றும் எதிரணி வேட்பாளர் மைத்திரி  உட்பட ஹெல உறுமய, ஜே.வி.பி. போன்ற கட்சிகள் மஹிந்தவை குற்றம் சாட்டி வருகின்றனா்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நான் மட்டும் “தவறு” செய்யவில்லை எல்லோரும் சோ்ந்தே செய்திருக்கிறோம் என்று மஹிந்த பதிலளித்திருக்கிறாா்.

Post a Comment

0 Comments