ஜனாதிபதி மஹி்நத ராஜபக்சவினால் தேர்தல் பிரச்சார உத்தியாக திஸ்ஸ அத்தநாயக்க்வினால் ஊடகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட் ரணில் - மைத்ரீ போலி ஒப்பந்தமானது தற்போதைய ஜனாதிபதி மஹி்ந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அவரை அதிகாரத்தில் இருந்து நீக்கும் பாரதூரமான குற்றச் செயலாகும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார.
பொது அபேட்சகர் மைத்ரீபால சிரிசேனவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாக பிராசாரப் படுத்தப்பட்டுவரும் ஆவணமானது போலியானது என நிருபணமாகியிருக்கும் நிலையில் 452வது சட்டப் பிரிவின் கீழ் குற்றம் நிகழ்த்தப்பட்டு 20 வருடங்கள் வரையில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அவகாசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பான 83வது சட்ட பிரிவின் கீழ் தேர்தலில் போட்டியிடும் அல்லது போட்டியிடும் அபேட்சகர் தொடர்பில் பணியாற்றும் யாராயினும் ஒருவர் தொடர்பில் போலியான எந்தவொரு விடயத்தையும் பிரசுரிப்பதானது ஒரு குற்றமாகும் எனத் தெரிவித்தார்.
இக்குற்றத்திற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீ்ண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உச்ச நீதிமன்றம் ஊடாக அவரை பதவிநீக்கம் செய்யவும் முடியும் எனவும் தெரிவித்தார்.

0 Comments