பலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) இணையும் ஆவணத்தில் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கைச்சாத்திட்டுள்ளார்.
ஐ.சி.சி. நிறுவப்பட அடிப்படையாக இருக்கும் ரோம் உடன்படிக்கையிலேயே ரமல்லாஹ்வில்
வைத்து அப்பாஸ் கைச்சாத்திட்டுள்ளார். இந்த அங்கத்துவத்தின் மூலம் பலஸ்தீனத்தால்
இஸ்ரேல் மீது யுத்த குற்றச்சாட்டுகளை சுமத்த வாய்ப்பு ஏற்படுகிறது. எனினும் இந்த முன்னெடுப்புக்கு இஸ்ரேல் பிரதமர் உடனடியாக கண்டனம் வெளியிட்
டிருந்தார்.
பலஸ்தீன தீர்மானத்திற்கு 15 அங்கத்துவம் கொண்ட பாதுகாப்பு சபையில் எட்டு நாடுகள்
ஆதரவாக வாக்களித்ததோடு அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா எதிராக வாக்களித்தன.
தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு பெரும்பான்மை யான 9 வாக்குகள் தேவை.
ரமல்லாஹவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் அப்பாஸ் சுமார் 20 சர்வதேச
உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டார். இதில் பலஸ்தீனம் ஐ.சி.சியில் இணைவதற்கான
முதல்கட்ட நடவடிக்கையாகவே ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
"எம்மீதும் எமது நிலத்தின் மீதுமான அவர்களது அக்கிரமிப்புக்கு எதிராக நாம்
முறைப்பாடு செய்ய வேண்டி இருக்கிறது. பாதுகாப்புச் சபை எமக்கு அதிருப்தியையே
ஏற்படுத்தியது" என்று அப்பாஸ் குறிப்பிட்டார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, இஸ்ரேல் பதி
லளிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கும் என்றும் இஸ்ரேல் இராணுவத்தினரை பாது
காப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக் காவும் இந்த நடவடிக்கைக்கு கண்டனத்தை
வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ஐ.சி.சியின் அங்கத்துவ நாடு இல்லை என்பதோடு அதன் தீர்ப்புகளையும்
அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 இல் பலஸ்தீனம் ஐ.நாவில் அங்கத்துவம் அற்ற பார்வையாளர் அந்தஸ்துக்கு ஐ.நா.
பொதுச்சபையில் ஆதரவாக வாக்கு கிடைத்ததை அடுத்தே அதற்கு சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தில் இணைய வாய்ப்பு கிடைத்தது.
ஐ.சி.சியின் அங்கத்துவம் உறுதிப்படுத்தப்படாத போதும் பலஸ்தீனம் அதற்காக விண்ணப்
பித்திருப்பது அரசியல் ரீதியில் தீரக்கமானதாக இருப்பதாக அவதானிகள்
குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேல்-காசாவுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற 50 நாள் மோதலில் 2,100 பலஸ்தீனர்கள்
கொல்லப்பட்டிருந்தனர். ஹேகை மையமாகக் கொண்டு இயங்கும் ஐ.சி.சியினால் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான
குற்றச்செயல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து தனி நபர்கள் மீது வழக்கு
தொடுக்க முடியும்.

0 Comments