Ticker

6/recent/ticker-posts

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி நிறைவுறுவதற்கு இன்னும் 7 நாட்கள் மாத்திரமே உள்ளன – மைத்திரிபால

பொது எதிரணி ஏற்பாடு செய்திருந்த பிரசாரக்கூட்டமொன்று பொரளையில் நேற்று (01) நடைபெற்றது.
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது,  புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்  மைத்திரிபால சிறிசேன பின்வரும் கருத்துக்களைக் கூறினார்,


ஜனாதிபதி ஒருவர் 6 வருடங்கள் மாத்திரமே ஆட்சியில் இருக்க முடியும்.மேலும் இரண்டு வருடங்கள் ஆட்சி புரியக்கூடிய காலம் இருக்கின்ற சந்தர்ப்பத்தில்தற்போது தேர்தலை நடாத்துகின்றார்வெற்றி பெற முடிந்தால் இரண்டு வருடங்கள் ஆட்சி செய்து விட்டுபின்னர் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு அதிலிருந்து வருடங்கள் ஆட்சி செய்யவே முயற்சிக்கின்றார்முன்னெடுக்கவுள்ள அரசியல்சீரழிவு நன்றாகப் புரிக்கின்றது.
உலகிலுள்ள எந்த நாட்டில் எந்தத் தலைவர் தொடர்ச்சியாக 8வருடங்கள் ஆட்சி செய்கின்றார்அவ்வாறான நாடொன்று குறித்து நாம் கேள்வியுறவும் இல்லைசுதந்திரத்தின் பின்னர் இவ்வாறான முன்னணியொன்று ஸ்தாபிக்கப்படவில்லைஇது தனி ஒரு மனிதனின் பொறுப்பு கிடையாதுஅனைவரது ஒன்றிணைவாகும்.
அதனால், நாங்கள் ஸ்தாபிக்கின்ற புதிய அரசாங்கமானது உங்களின் அரசாங்கம்இந்த நாட்டிலுள்ள பொதுமக்களின் அரசாங்கம்மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி நிறைவுறுவதற்கு இன்னும் நாட்கள் மாத்திரமே உள்ளன. ராஜபக்ஸ குடும்பத்தின் விளையாட்டுக்கள் அனைத்தும் இன்னும் நாட்கள் மாத்திரமே இருக்கப் போகின்றனஅதனை மிக தெளிவாகக் கூற வேண்டும்.

Post a Comment

0 Comments