Jersey இலிருந்து புறப்பட்ட Blue Island விமானத்தின் இயந்திரம் தீப்பற்றியதால் லண்டன் Southend விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தீயணைப்புப் படையினர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
விமானத்தில் இரண்டு இயந்திரங்கள் காணப்படுவதால் ஒன்று தீப்பற்றியதும் அடுத்த இயந்திரத்தைப் பயன்படுத்தி விமானி விமானத்தை பெரும் சிரமத்தின் மத்தியில் தரையிறக்கியுள்ளார். இதனால் விமானத்தில் பயணித்த 28 பேருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments