இந்த நாட்டில் இராணுவம் புறக்கணிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. அந்த தடைகளை உடைத்தெறிந்து இராணுவத்திற்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்து கொடுத்து ஒத்துழைத்ததோடு, இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் சேர்த்துக்கொண்டதோடு நிற்காமல் எனது புதல்வன் ரோஹித ராஜபக்சவையும்
கடற்படையில் இணைத்தேன் என கண்டியில் வைத்து தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.
நேற்றைய தினம் இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் நாட்டில் சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே எனது புதல்வனைக்கூட இணைத்துக்கொண்டேன். அவ்வாறு போராடிப் பெற்ற சமாதானத்தை இல்லாதொழிக்க இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments