முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க படைவீரர்களின் உயிர்களை மதிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி, போரின் போது அவர் பூநகரி மற்றும் ஆனையிறவு ஆகிய இடங்களை விடுதலைப் புலிகளுக்கு அன்பளிப்பாக வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.மேலும், போரின் போது ஒரு அடி முன்வைத்த காலை, இரண்டு அடி பின் வைத்துவிட்டு தான், போருக்கு 75 வீத பங்களிப்பு செய்ததாக கூறுகிறார். முன்னாள் ஜனாதிபதியின் போர் பங்களிப்பு குறித்த கருத்து முற்றாக கண்டிக்கத்தக்கது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments