Ticker

6/recent/ticker-posts

மக்கள் போலி பிரசாரங்களை நம்பமாட்டார்கள் என்பதை மறந்து எதிரணி செயற்படுகிறது: ஜோன் செனவிரட்ன

போலிப் பிரசாரங்களை மக்கள் நம்ப தயார் இல்லை என்பதை மறந்து எதிரணியினர் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில், முன்னாள் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்கா, ஹொரணை பிரசாரத்தின் போது மைத்திரியுடன் இணையப்போவதாக தெரிவித்தனர். பின்னர் களுத்துறையில் அமைச்சர் குமார வெல்கம மைத்திரியுடன் மேடையேறப் போவதாக பிரசாரம் செய்தனர்.

இறுதியில் என்னையும் விட்டு வைக்கவில்லை. நேற்று இரத்தினபுரியில் இடம்பெற்ற பிசாரத்தின் போது, நான் மைத்திரியுடன் மேடையேறப் போவதாக பிரசாரம் செய்தனர். ஆனால், நான் ஒருபோதும் அரசிலிருந்து விலகமாட்டேன். எதிரணியின் இவ்வாறான போலி பிரசாரங்களை யாரும் நம்ப வேண்டாம் என அமைச்சர்; தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரத்தினபுரியில் நேற்றைய தினம் இடம்பெற்ற எதிரணியின் பிரசாரத்திற்காக பெரிய மைதானம் ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், அதில் பிரசார கூட்டத்தை நடத்தாது சிறிய மைதானம் ஒன்றை தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம், அங்கு அவர்களுக்கு ஆதரவு குறைவு என அறிந்த எதிரணியினர், சிறிய மைதானத்தில் மக்கள் கூட்டத்தை பெரிதாக காட்ட பார்க்கின்றனர். இவ்வாறாக எதிரணியினரின் பாசாங்கு செயல்களே அதிகமாக காணப்படுகிறது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments