Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி கோபப்படுவதை விடுத்து உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்: மைத்ரிபால

ஜனாதிபதியின் பதற்றம் தற்போது அதிகரித்து வருகிறது. தனது நிலையை சரிவர புரிந்துகொள்ள முடியாமல் அவர் கோபப்படுகிறார், வாய் உளறுகிறார். அவ்வாறில்லாமல் அவர் சற்று நிதானமடைந்து கள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என கோரியுள்ளார் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன.

நேற்றைய தினம், நல்லாட்சிக்கான இராணுவ வீரர்கள் எனும் அமைப்பினால் இராணு வீரர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில், உங்கள் ஆட்சிக்கும் உங்களுக்கும் எதிராக தற்போது மக்கள் எழுச்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு மக்கள் ஆணைக்குத் தலைவணங்கி நீங்கள் பதவி விலகிவிட்டால் மக்களை மதிக்கும் தலைவனாகுவீர்கள். ஜனநாயகத்துக்கு வேறு மாற்றீடோ மாற்று சக்தியோ இல்லை எனவே நாட்டு மக்கள் மீது அக்கறையிருந்தால் அவர்களை நீங்கள் விரும்புவதாக இருந்தால் கள சூழ்நிலையை புரிந்து கொண்டு மக்கள் ஆணைக்கு கட்டுப்படுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments