கிழக்கு மாகாணத்தில் விநியோகிக்கவென தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் நல்லுறவை சிதைக்கும் வகையிலான தகவல்கள் மற்றும் பொது வேட்பாளர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றிய தகவல்கள் அடங்கிய வகையில் அச்சடிக்கப்பட்டு தயாராகவிருந்த துண்டுப்பிரசுரங்கள் நேற்று இரவு கைப்பற்றப்பட்டிருந்த தகவல் வெளியாகியிருந்தது.அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களில் ஜனாதிபதி ஆலோசகர் அருண்
தம்பிமுத்துவின் செய்தியும் அடங்கியுள்ளது
இந்நிலையில் இப்பிரசுரங்கள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கப்ராலின் வீட்டிலிருந்தே பெறப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த இருவரினுடைய தொடர்புகள் அடிப்படையில் இது கிழக்கில் வேண்டுமென்றே இனங்களுக்கிடையிலான முறுகலை உருவாக்க திட்டமிட்ட சதியெனவும் இதன் பின்னணியில் அரசாங்கத்தின் ஈடுபாடு இருக்கலாம் எனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விடுதலைப்புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக அக்காலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த சாம் தம்பிமுத்து (பா.உ, மட்டக்களப்பு) தம்பதிகளின் புதல்வரான அருண் தம்பிமுத்து அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவினால் பாதுகாக்கப்பட்டு ஐக்கிய இராச்சியம் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததோடு அங்கு பல தொழில்களில் ஈடுபட்டு பின் கருணா அம்மான் தமது குடும்ப சொத்துக்களை அபகரித்து வைத்திருப்பதாக அவரோடும் போராடிய நிலையில் ஜனாதிபதி ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தவராவார்.
குறித்த இனத்துவேச நடவடிக்கையில் அவரது படம் தாங்கிய செய்தியும் கொண்டே துண்டுப்பிரசுரம் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments