Ticker

6/recent/ticker-posts

ஈ.பி.டி.பி ஆதரவாளர்களுக்கும், அங்கஜனின் ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல்

ழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை மோதல் சம்பவபொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை யாழ் துறையப்பா மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த நிலைமை பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் இரு தரப்பினராலும் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

0 Comments