Ticker

6/recent/ticker-posts

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள புஷ்சின் சகோதரர்

புளோரிடா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஜெப் புஷ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் முதல் கட்டமாக பல்வேறு தொழில் நிறுவனங்களில் அவர்
வகித்து வரும் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜோர்ச் புஸ்சின் சகோதரனான இவர் அமெரிக்காவின் குடியேற்ற சீர்திருத்த விரிவாக்க விவகாரத்தில் குடியரசு கட்சி சார்பில் வாதாடி வரும் சட்டத்தரணிகளில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments