லண்டனிலிருந்து இலங்கைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கா எயார் லைன்சிற்கு சொந்தமான UL 504 ரக விமானம் இயந்திரக் கோளாறால் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
லண்டன் Heathrow விமான நிலையத்திலிருந்து 8.30 மணியளவில் புறப்பட வேண்டிய விமானம் இயந்திரக் கோளாறால் 10
மணிநேரங்களுக்கு மேல் புறப்படாததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் விமானத்தில் பயணிக்க இருந்த 360 பயணிகளும் தற்போது ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை அவர்களுக்கு விமானம் குறித்த எதுவித தகவலும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உரிய நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என அங்குள்ள பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 Comments