Ticker

6/recent/ticker-posts

படங்கள் - இலங்கைத் தமிழரான மயூரனுக்கு இன்று இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஆஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகியோருக்கு இன்று இரவு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இந்த நிலையில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையிலும், ஆண்ட்ரூவிற்கும், அவரது காதலிக்கும்  திருமணம் நடைபெற்றுள்ளது. 

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மயூரன் சுகுமாரன், ஆண்ட்ரூ சான்ஆகியோர் இந்தோனேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று 28.04.2015 பிற்பகல் 2 மணிக்கு அவர்களை கடைசியாகப் பார்க்க குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்தோனேசிய அரசு வழங்கியது. 






ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரனுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு குரல் கொடுத்துப் பார்த்தது. ஆனால் அதை இந்தோனேசிய அரசு நிராகரித்து விட்டது.. போதை பொருள் கடத்தலால் நாட்டில் குற்றங்கள் பெருகி நாட்டுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ பொது மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டார். 

இதையடுத்து இன்று இரவு இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக மயூரனின் குடும்பத்தாருக்கு இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் இன்று பிற்பகலில் மயூரைன அவரது குடும்பத்தினர் சந்தித்தனர். அப்போது மயூரனின் சகோதரி மயங்கி விழுந்தார். 

ஆண்ட்ரூ சானின் தாயார் கண்ணீர் விட்டபடி மகனிடம் பேசினார். முன்னதாக சிறையில் இருந்தபடியே தனது காதலியை மணந்தார் ஆண்ட்ரூ என்பது நினைவிருக்கலாம். உலகம் முழுவது இவர்களது மரண தண்டனை ஒத்திவைக்கப்படாதா என ஆவலோடு காத்திருக்கும் தருணத்தில் இறுதி நேரத்தில் ஏதும் அற்புதங்கள் நிகழாதா என இவர்களது குடும்பத்தினர் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

மரணதண்டனைக்குப் பின்னா் இறுதி கிரியைகள் மேற்கொள்வதற்காக தயாரான நிலையில் சவப்பெட்டிகளுடன் அம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக இருப்பதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments