Ticker

6/recent/ticker-posts

பசிலுக்கு 27 திகதி வரை விளக்கமறியல்..!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கடந்த மாதம் பசில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டார்.
எனினும் சுகயீனம் காரணமாக பசில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments