Ticker

6/recent/ticker-posts

கலாநிதி நிர்மால் ரஞ்சித் மீதான தாக்குதல் குறித்து விசாரணை

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிரி மீது நேற்று  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தொிவித்துள்ளார்.
அண்மைக் காலங்களில் சிங்கள இனவாதத்திற்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் எதிராக குரல்கொடுத்து வந்த தேவசிாி சிங்கள முற்போக்கு அணியில் இணைந்து செயற்பட்டவராவாா்.  நேற்று கிருலப்பனை லலித் அத்துலத்முதலி விளையாட்டரங்கிற்கு அருகில் வைத்து இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.
தாக்குதலில் காயமடைந்த இவர் தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  

Post a Comment

0 Comments