புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைதானவர்களை இன்று 12 மணிக்கு மக்கள் முன் கொண்டுவராமையால் ஆத்திரமுற்ற ஆா்ப்பாட்டக் காரர்கள் யாழ் நீதிமன்றத்தை அடித்து நொருக்கியுள்ளனர்.
இன்று நண்பகல் 12 மணிக்கு சந்தேக நபரையும் சட்டத்தரணியையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தபோதிலும், 12 மணி கடந்தும் அவர்கள் கொண்டு வரப்படாததையடுத்து, மக்கள் கூட்டம் ஆத்திரமுற்று யாழ் நீதிமன்ற கட்டிடத்திற்குள் புக முயன்ற போது ஏற்பட்ட கலவரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொருக்கியுள்ளனர்.














0 Comments