நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் கைது செய்யப்படுவதனை சட்ட மா அதிபர் யுவான்ஜித் தடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டிரான் அலஸிற்கு எதிரான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்வதனை சட்ட மா அதிபர் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் டிரான், உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்
டிரான் அலஸ் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பொலிஸ் பிரிவினர், கைது செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனிடம் ஆலோசனை கோரியுள்ளனர்.
கைது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியினர் எதிர்க் கட்சியினரை அரசியல் ரீதியாக பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக டிரான் அலஸ் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு எதிர்வரும் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

0 Comments