Ticker

6/recent/ticker-posts

''ராஜபக்ஷ கல்லறை''க்கு செலவிட்ட 6 கோடி ரூபா அரச பணத்தை திருப்பி வழங்க முடிவு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையரான டீ.ஏ. ராஜபக்ஷவின் கல்லறையை அரச பணம் 6 கோடிகளை செலவிட்டு நவீனமயப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷ இப்போது அந்த பணத்தை திருப்பி வழங்க முடிவு  செய்திருப்பதாக அறிய வருகிறது.


வீரகெட்டிய அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் அரச பொதுப் பணம் தனிப்பட்ட ஒருவரின் கல்லறைக்கு செலவிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அப்பணத்தை மீண்டும் அரசுக்கு வழங்க மஹிந்த முடிவெடுத்திருக்கிறார்.

6 கோடி ரூபாய்களை செலவிட்டு நவீனமயப்படுத்தப்பட்ட இந்த கல்லறை திட்டத்திற்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சும், நகர அபிவிருத்தி அதிகார சபையும் சிபார்சு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments