மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்குத் தேவையான மருந்துவகைகள் சிலவற்றை நேரடியாக கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அமைச்சின் கண்காணிப்புடன் குறிப்பிட்ட மருந்து வகைகளை நேரடியாக கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.எம்.டி. திசாநாயக்க தெரிவிக்கின்றார்.
விசேட தேவையின் அடிப்படையில் அந்த மருந்து வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என்றும் அமைச்சின் செயலாளர் கூறினார்.
மஹரகம வைத்தியசாலைக்கு தேவையான ஏனைய மருந்து வகைகளை வைத்திய வசதிகள் விநியோகப் பிரிவிடமிருந்து கொள்வனவு செய்து, விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.
0 Comments