வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் போராட்டம் நடாத்துபவர்களே புற்று நோயாளிகள். புற்று நோய்க்கான மருந்துகள் மிகவும் விலை உயர்ந்தவை. இந்த விலை உயர்ந்த மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்காமல் அவற்றை நோயாளிகளுக்கு வழங்கி விட்டதாக பதிந்து விட்டு வெளியில் விற்பனை செய்த மோசடி கடந்த வருடம் அம்பலமானது.
அது ஜனாதிபதி மைத்திரிபால சேனாநாயக்க சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில். இந்த மனிதாபிமானமற்ற மோசடி வியாபாரத்தில் பங்கு கொண்ட பிரபல வர்த்தக நிறுவனத்தின் நால்வரை இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் மருந்தக உத்தியோகத்தர்கள் நால்வரோடு இணைந்து இந்த மோசடியை குறித்த மருந்து விநியோக நிறுவனம் செய்திருப்பதாக அறிய வருகிறது.
புற்று நோயாளிகளுக்கு மருத்துவர்களால் நியமிக்கப்படும் மருந்துகள் ஊசி மூலமே ஏற்றப்படுகின்றன. ஊசிகள் மூலம் சேலைன் திரவத்தின் ஊடாக நோயாளிகளின் உடலுக்கு அவை ஏற்றப்படுகின்றன.
இந்த சேலைன்னுக்கு ஊசிமூலம் மருந்தை கலக்கும் நடவடிக்கை பாதுகாப்பான குளிரூட்டப்பட்ட அறைகளில் ( Mixing Room) இடம்பெறுகின்றன.
நோயாளிகளின் பாதுகாப்பு கருதி நடைபெறும் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளும் மனித நேயமற்ற பணத்திற்காக சோரம் போன மருந்தக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் காணாத இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு நியமிக்கப்பட்ட மருந்துகளை சேலைனுக்கு எற்றாமல் வெறும் சேலைனை மற்றும் நோயாளிகளுக்கு ஏற்றி விட்டு நோயாளிகளை ஏமாற்றி விடுகின்றனர்.
அத்தோடு நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகளை மீண்டும் குறித்த மருந்தை விநியோகம் செய்த மருந்து நிறுவனத்திற்கு விறபனை செய்து பணம் சம்பாதித்து கொள்கின்றனர்.
புற்று நோயாளிகளின் மருந்துகளை திருடும் இந்த இழிநிலை ஊழியர்கள் இதற்கு சொல்லும் சாட்டு வேதனை தரக்கூடியது. இன்றோ நாளையோ இறப்பதற்காக இருக்கும் இந்த நோயாளிகளுக்கு இந்த பெறுமதியான மருந்தை கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அவர்கள் அந்த பணத்திலிருந்து பிரயோசனம் பெறுகின்றார்களாம்.
மஹரகம வைத்தியசாலையின் ஒருசில மருத்துவர்களும் இந்த மனிதாபிமானமற்ற மோசடிகளுக்கு உடந்தையாக இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளே இவ்வாறு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வு பணியகத்தின் விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
0 Comments