Ticker

6/recent/ticker-posts

சட்டத்தரணிக்கு கொடுக்க காசு இல்லை காதணியை கழற்றித் கொடுத்த பெண்!

நேற்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு வந்த ஒரு பெண் தனது கணவனுக்காக நீதிமன்றில் ஆஜரான பெண் சட்டத்தரணிகள் இருவருக்கு கொடுப்பதற்கு கையில் பணமில்லாத காரணத்தால் தனது இரு காதணிகளை கழற்றி கொடுத்துள்ளார்.

மனிதாபிமானத்தை கேள்விக் குறியாக்கியிருக்கும் இந்த சம்பவம் இன்றைய சிங்கள நாளிதழ்களில் முக்கிய இடம்பிடித்த செய்தியாக மாறியுள்ளது. குறித்த பெண் தனது ஒரு காதணியை இலகுவாக கழற்றிய போதும் அடுத்த காதணி கழற்ற முடியாமல் இறுகியிருந்ததாகவும், அந்தக் காதணியை மிகவும் சிரமப்பட்டு தண்ணீரை ஊற்றி ஊற்றி கழற்றியதாகவும் அதனைக் கண்ட மக்கள் முறையிட்டுள்ளனர்.


குறித்த நீதிமன்றின் நீதவான் இந்த செய்தியை அறிந்து அந்த இரண்டு பெண் சட்டத்தரணிகளையும் கண்டித்து எச்சரிக்கை விட்டதாகவும்  அறிய வருகிறது.

Post a Comment

0 Comments