Ticker

6/recent/ticker-posts

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் குறைந்தும் பஸ், ஆட்டோவின் கட்டணம் குறையவில்லை பயணிகள் விசனம்!


(எம்.எஸ்.எம். ஸாகிர்)
எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுபெற்றொல் மற்றும் டீசலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் பஸ்ஆட்டோ ஆகியவற்றுக்கு அறவிடப்படும் கட்டணம் இன்னும் குறைக்கப்படவில்லை என பயணிகள் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எரிபொருட்களின் விலைகள் 2 தடவைகள் குறைக்கப்பட்டிருந்தும் ஏன் இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடுகின்றனர் எனவும் கட்டணங்களை கூட்டுவதில் எடுக்கும் ஆர்வம் ஏன் விலை குறைக்கப்படும் போது அமுலுக்கு கொண்டு வருவதில் தாமதத்தைக் கையாளுகின்றனர் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
பஸ் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள், கட்டணங்கள் அதிகரிக்கப்படும் அறிவித்தல் வந்தவுடன் எடுக்கும் துரித நடவடிக்கைகளைகட்டணங்கள் குறைக்கப்படும் போது கவனத்தில் கொள்வதில்லை எனவும் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்பொது மக்களின் நலன்கருதி, பொது மக்களும் பயனடையும் வகையில் இதற்கான தீர்வைப் பெற்றுத் தருமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Post a Comment

0 Comments