Ticker

6/recent/ticker-posts

அமைச்சுகளுக்கு நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத ஆளும்தரப்பு இன்றும் பாராளுமன்ற வளாகத்திற்கு வந்திருந்த போதும் சபை அமா்வுகளில் கலந்து கொள்ளவில்லை.
இன்றைய பாராளுமன்ற அமா்வில் அமைச்சர்களுக்கு, பிரதி அமைச்சர்களுக்கு மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அரசாங்க
நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த  பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆமோதித்து வழிமொழிந்தார்.
.

Post a Comment

0 Comments