கருணா அம்மான் அல்லது விநாயகமூர்தி முரளீதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐதே.க பாராளுமன்ற உறுப்பினர்களை நான் யார் தொியுமா? என்று அச்சுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் தன்னை அச்சுறுத்துவதாகவும், 2004 க்கு முன்பிருந்த தன்னைப்பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லதென முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எல்.டீ.டீ.ஈ. இயக்கதின் ஆயுதப் போராட்டத் தலைவராக இருந்த பிரபாகரனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிலிருந்து விலகி பின்பு அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வந்த அவர், தனது உத்தியோக ட்விட்டர் பக்கத்தில் “ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் தன்னை பயமுறுத்த முயன்று வருகின்றனர். அநேகமானோர் செய்திகள் மற்றும் தொலைபேசி ஊடாகவும் அச்சுறுத்தியுள்ளனர். நான் மட்டக்களப்பு கருணா அம்மான் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. 2004 க்கு முன்பிருந்த கருணா அம்மான் யாரென்பதை அவர்கள் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் தலைவா் பிரபாகரனுடன் கருத்து முரண்பாடு கொண்டிருந்த நிலையில் புலிகளின் கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து அப்போதைய ஐதேக பாராளுமன்ற அங்கத்தவா் ஒருவரின் தயவில் கருணா அம்மான் உயிா்தப்பி கொழும்பு வந்து சேர்ந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Comments